Saturday, December 29, 2007

'ச' உம் தமிழும்...

'ச' பற்றிய ஒரு செய்தியைத் தற்செயலாக அறிய நோ்ந்தது.
தொல்காப்பிய செய்யுள் :
"சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஔ எனும் மூன்றலங் கடையே"
அதற்கு இளம்பூரனார் எழுதிய உரைப்படி,
தமிழில் 'ச', 'சை', 'சௌ' என்ற எழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிக்கமுடியாது.

பின்னர் வந்த நன்னூலில் நிறைய சொற்கள் 'ச' இல் ஆரம்பிக்கின்றன.

இதில் என்ன கவனிக்கப்படவேண்டிய விடயமெனில், இரண்டுமே தமிழ் இலக்கணம் பற்றிக் கூறும் நூல்கள்.