Wednesday, October 1, 2008

நற்றிணையிலிருந்து... - From Natrinai


362. பாலை

வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும்,
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.
                               -மதுரை மருதன் இள நாகனார்

(கரிய நிறம் கொண்ட என் காதலியே, உற்சாகம் சிறிதும் இன்றி ஒரு பொம்மையை போல்
உன் தந்தையின் நிலத்தை விட்டு நான் கூறிய வார்த்தைக்காக கடந்து வந்தவள் நீ .
முதல் புயலின் காரணமாக மேகம் பொழியும் குளிர்ச்சியான மழை இந்த பரந்த விரிந்துள்ள  காடுகளுக்கு அழகு சேர்கின்றது, இங்கே இருக்கும் முதையை நோக்கி அவற்றை பிடித்து சிறிது நேரம் விளையாடு….
நான் சிறு யானைகள் உறுஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற் பரப்பினையுடைய, அதன் பெரிய பின்புறத்தில் மறைந்துகொள்கிறேன்… கள்வர்கள் யாரும் போரிட வந்தால் அஞ்சாமல்
 போரிட்டு அவர்களை துரத்தி அடிப்பேன்….. உன் உறவினர் யாரும் உன்னை தேடி வந்தால் நான் மரத்தின் பின் பகுதியில் ஒளிந்துகொள்வேன் !)

English Translation

You walked stiff as a puppet
as you left your father's land.
Now, here on the expanse of the meadow
made lovely by the clouds pouring down their cool rain
in the first strom of the the season,
see the scarlet beetles,
pick them up,
play with them a bit.
I will go to the sandly place behind the great-trunked venkai tree
three
whose bark young elephants have rubbed smooth.
If men come to fight me,
I will not be afrais, I will turn them back.
But if your people come,
I will hide,dark one.

Poet : Maturai Marutan Ilannakanar

Translated by George L Hart

(An interesting poem from Narrinai, here the Talaivan(hero) elopes with  Talaivi(heroine). Talaivi is unhappy leaving her fathers place but on
insistence of the Talaivan , she elopes with him.  The Talaivan says that if anyone tries to come and fight with him for the reason he has
eloped with Talaivi he would stand and fight with them and chase them away. He also says he would prefer to hide rather than fight her
relatives who have now become his relatives. For Talaivan the eloping is equivalent to the marriage, so he considers its a sin to fight off
his own relatives. )

நன்றி : Tamil Heritage Foundation Google Group  -  http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/48ab86a595c9249b

3 comments:

sulo said...

Thanks a lot for the English translation. It is a rich poem. I felt to read again and again. Every time I read it I felt like there is a deep meaning hidden somewhere among these lines.

யாரோ said...

வாழ்த்துக்கள் சர்வேஸ் ..எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள்....நடையும் அழகு

நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்

-கார்த்தி

Saranya S said...

Wow really nice lines of description! What Natrinai book is about?
Very nice, again.