எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று இது...
ஏனோதெரியவில்லை என்னை மிகவும் பாதித்த பாத்திரம் பூங்குழலி... அந்தப் பெயரால் ஆகவும் இருக்கலாம்.
அடுத்து ஆழ்வார்க்கடியான்... வந்தியத்தேவனின் வழியல்..:-)
எப்படித்தான் கல்கியால் அந்த 2300 பக்கங்களையும் வாசிப்போர் சிறிதும் சலிப்படையாமல் படைக்கமுடிந்ததோ?
கதையில் வரும் திருப்பங்களை என்னவென்று சொல்ல?
புத்தகத்தை மூன்றுதரம் வெவ்வேறு காலப்பகுதியில் வாசித்துள்ளேன். ஒவ்வொரு காலப்பகுதியிலும் அக்கால உணர்வு, முதிர்ச்சி என்பவற்றிற்கிணங்க புதிய பரிமாணங்கள் புரியும்.. அந்த புதிய பரிமாணங்கள் என்னை இன்னொரு தடவை வாசிக்கவும் தூண்டுகிறது... வாசிக்கவேண்டும்...
No comments:
Post a Comment